🔴 ஸ்ரீ ராமன் தசரத குமாரனாக அவதரிக்கும் முன் இராவண சம்ஹார துணைக்காக தேவர்கள் வானரங்களாக வந்து பிறப்பெடுத்து போல கல்கி அவதாரம் உலகில் ஏற்படுவதற்கு முன் பிறந்து வந்த ஞான புருஷர்களின் ஒருவர் நமது குருஜி.
இவர் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள கரைச்சுத்துப்புதூர் என்ற குக்கிராமத்தில் பாலு - அரிச்சந்திரகனி தம்பதியினருக்கு திருமகனாக குருஜி அவதரித்தார் இவரது தெய்வீக பணிகளை முன்கூட்டியே ரிஷி ஒருவர் மூலம் அறிந்து சொன்னவர் தாய் வழிபாட்டியான சண்முகவடிவு அம்மாள். குருஜியின் அவதார திருநாள் 16.7.1960 நிகழ்ந்தது
🔴 குருஜி பிறக்கும் போது பரிபூரண ஆரோக்கியம் உள்ளவராகவே பிறந்தார் அவரது ஒன்றரை வயதில் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கபட்டார் மரணத்தின் கோரப்பிடியை அவர் நெருங்கும் போது குருஜியின் தாயாரின் கனவில் வந்த திருச்செந்தூர் முருகன் உன் மகன் சாகப்பிறந்தவன் அல்ல சாதிக்க பிறந்தவன் கவலைப்படாதே என்று கூறி மறைந்தார். நாற்பது நாட்களுக்கு மேல் சுய உணர்வு இல்லாது மயக்கத்தில் இருந்த குருஜி இந்த கனவு கண்ட அடுத்த நாளில் கண்களை திறந்து அனைவரையும் பார்த்து சிரித்தார். மூளை காச்சல் நோயின் தாக்கம் அவர் முதுகெலும்பை மட்டுமே பாதித்திருந்தது அதன் மூலம் அவரது கால்கள் செயல் இழந்து விட்டன ஆனால் மூளையின் பலப்பகுதிகள் அதிசயப்படும் விதமாக செயல்பட துவங்கி சாதாரண மனித நிலைக்கும் தாண்டி அபூர்வ ஆற்றல்கள் பல வற்றை பெறுவதற்கு வழி ஏற்பட்டது. மருத்துவ துறைக்கே கட்டுப்படாத நிலையிலிருந்த குருஜி சுகமடைந்தது தனது சிகிச்சையால் அல்ல முருகனின் திருவருளாலே என்று கூறி குருஜிக்கு ஸ்ரீதர் ஜெயமுருகன் என்ற பெயரை சிகிச்சை செய்த மருத்துவர் அன்போடு வைத்தார்.
🔴 கல்வி கற்பதில் அசாத்தியமான திறமை குருஜியிடம் நிறைந்திருந்தது ஒரு புஸ்தகத்தை முதல் பக்கம் படித்தவுடனே அதிலுள்ள விஷயங்களை உள்வாங்கி கொள்வார் அபரிதமான நினைவாற்றலும் கற்பனை வளமும் நாவன்மையும் குருஜியிடம் இயற்கையாகவே இருந்தது இதை பற்றி குருஜி கூறும் போது அது கனவோ நினைவோ எனக்கு தெரியாது வெண்பட்டு உடுத்திய தெய்வீக மாது ஒருத்தி என்னிடம் கைநிறைய புத்தகங்களை கொடுத்தது போல் உணர்ந்தேன் அது முதல் படிப்பில் மேல் அபரிதமான ஆர்வமும் ஆற்றலும் வந்துவிட்டது அந்த தெய்வீக மாது ஒருவேளை என் மீது இரக்கம் கொண்ட அன்னை கலைவாணியாக கூட இருக்கலாம் என்று சொல்லுவார். இதன் பயனாக பல மந்திர ஒலிகளை கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தால் நேருக்கு நேராக காணும் பாக்கியத்தை பெற்றேன் நான் கண்டு உண்னர்ந்த மந்திரங்களை துக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்காக பயன்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கங்களில் மிக முக்கியமானதாகும் என்றும் அவர் கூறுவார் இவர் வகுப்பாசிரியர் திருமதி தேவநேசம் தங்கையா படிப்பதில் இவன் சாதாரண குழந்தை இல்லை தெய்வீக ஆற்றல் பொருந்திய குழந்தை என்று வியந்து பலமுறை கூறியிருக்கிறார்.
🔴 குருஜியின் மூத்த தமக்கையார் திருமணத்தின் போது திருமண கூட்டத்தில் வந்திருந்த ஊமையன் என்ற சித்த புருஷர் குருஜியின் குண்டலினி சக்தியை தனது ஆன்மீக பலத்தால் வெளிப்படைய செய்தார் அப்போது அதை பற்றி அறியும் பக்குவம் குருஜி பேற்றுக்க வில்லை ஆனால் அதன் பிறகு அவரது மனதிலும் உடம்பிலும் அறிவிலும் அபூர்வமான ஆற்றல்கள் பல நிகழ்ந்தன மற்றவர்கள் சாதாரண கண்களால் காணமுடியாத பல காட்சிகளை ரகசிய சூட்சமங்களை அவர் தனது கண்களால் நேருக்கு நேராக பார்க்கும் ஆற்றல் பெற்றார். தனது 27 வயதில் விஜயாபதியில் இருக்கும் விசுவாமித்திர மகரிஷியின் சூட்சம உருவத்தை தரிசிக்கும் வாய்ப்பை பெற்று அவரிடம் காயத்திரி மந்திர தீட்சை பெற்றதின் மூலம் ஆன்ம விழிப்பை அடைந்தார்.
🔴 198௦ ஆம் வருடம் பிறந்த இடத்த விட்டு தகப்பனார் வியாபாரம் செய்யும் அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் அரகண்டநல்லூருக்கு குருஜி வந்தார் அதிலிருந்து அவரது வாழ்வின் பயணமே முற்றிலும் மாறிவிட்டது பல ஞானிகள் சித்தர்கள் ஆன்மீக அனுபுதிமான்கள் ஆகியோரிடத்தில் நேரான தொடர்புகள் ஏற்பட்டன யோக மார்க்கத்தில் உள்ள பல ரகசியங்களை சுலபமாக கண்டறிந்தார் வானசாஸ்திரம் மந்திரசாஸ்திரம் யோகசாஸ்திரம் ஆகியவைகளின் மிகுந்த தேர்ச்சி பெற்றார். மிக தொன்மையான ஓலைசுவடி ஒன்று ஞானி ஒருவர் குருஜிக்கு வழங்கினார் அதிலிருந்து பல ரகசிய ஆன்மீக வழிமுறைகள் குருஜிக்கு புரிய துவங்கியது இந்த நிலையில் 1997 ஆம் வருடம் தை மாதம் 1 ஆம் தேதி ஸ்ரீமத் ருத்ர பரமஹம்சர் என்ற அவதூதரிடம் சந்நியாச தீட்சையையும் பரமஹம்சர் என்ற பட்டதத்தையும் பெற்று ஸ்ரீ ராமானந்த பரமஹம்சராக ஆனார். பக்தர்கள் அன்பாக குருஜி என்றும் அழைக்கபட்டார்.
🔴 கோடிமுறை ஸ்ரீ ராமநாம ஜெபம் செய்தால் ராம பிரானையே தரிசனம் செய்யலாம் என்பதை உணர்ந்து ராம நாம மஹா ஜெபத்தை குருஜி துவங்கினார் அப்படி அவர் செய்ய துவங்கிய பிறகு பலவிதமான தெய்வீக காட்சிகள் அவருக்கு தெரிய ஆரம்பித்தன பல தெய்வங்களை அவர் தரிசனம் செய்தார் அவர்களோடு கலந்துரையாடினார் யாருமே பெற்றிராத ஆன்மீக ரகசியங்கள் பலவற்றை அனுபவ வழியில் உணர்ந்தார் தூரத்தில் இருப்பதை இருந்த இடத்தில் இருந்தவாறு அறிவது வேறொரு உடம்பிற்குள் புகுந்து நடமாடுவது போன்ற அதி அற்புதமான கலைகள் அவருக்கு தெரிய வந்தன. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு பல குருமார்கள் குருஜியை தேடிவர இறைவனான நாராயணன் வழிவகை செய்தார்.
🔴 இறைவனை தரிசிக்க துன்பங்கள் மறைந்து இன்பமயமான வெளிச்ச பாதைகள் திறந்து வழிவிட மந்திரங்கள் மட்டுமே துணையாகும் என்று குருஜியின் குருதேவர் ஸ்ரீமத் ருத்ர பரமஹசர் அறிவுறுத்தினார் அதன் அடிப்படையில் அமிர்த தார மகாமந்திரம் என்ற மனுகுலத்துக்கான துக்க நிவாரண மந்திர மார்க்கத்தை குருஜிக்கு கொடுத்தருளினார். மறைந்து வருகிற மந்திர சாஸ்திரத்தை புதுபித்து புது ஜீவன் கொடுத்து உலக மாந்தர்கள் ஒவ்வொருவரும் மந்திரங்களின் மகிமையால் மேன்மை அடையவும் மந்திரங்களால் புது உலகம் உருவாக செய்யவும் நீ பூமிக்கு வந்துள்ளாய் என்று குருஜிக்கு உணர்த்தி ஜாதி மத இன மொழி பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் வழங்குமாறு அருள்கட்டளையை குருதேவர் கொடுத்தார். அதை சிரமேற்கொண்டு குருஜி உலக முழுவதுமுள்ள பல்லாயிரகணக்கான மக்களுக்கு அமிர்த தார மஹா மந்திரம் என்ற அமுதத்தை வாரி வழங்கி வருகிறார். அவரது நோக்கம் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மந்திர ஜெபம் நடக்க வேண்டும் அனைத்து ஜீவன்களும் துக்கத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுபெற்று ஆன்மீக வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.
🔴 பண்டையகால இந்திய ரிஷி பாரம்பரியம் என்பது அமைதியும் சாந்தியும் நிலவியதாகும். அந்த பாரம்பரியம் மீண்டும் உலகம் முழுவதும் வரவேண்டும் என்றால் சாதாரண மனிதர்கள் கூட இறை அனுபவத்தை இறை இன்பத்தை தனது வாழ்வில் ஒவ்வொரு துளியிலும் உணர வேண்டும். அப்படி உணர்வதற்கு நமது குருஜி மிகப்பெரிய ஆன்மீக ஆயுதமாக ஸ்ரீ நாராயண தீட்சை என்ற மகா வேள்வியை கையில் எடுத்துள்ளார். ஸ்ரீ நாராயண தீட்சை என்பது கண்ணாடியில் படிந்துள்ள தூசியை விளக்கி முக தரிசனத்தை பெறுவது போல மனித மனதில் படிந்துள்ள அகங்காரம் என்ற மாசை அகற்றி இறை தரிசனத்தை உணரும்படி செய்ய கூடியதாகும். இது ஆண் பெண் என்ற வர்க்க பேதமின்றி காலதேச வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்டு மனிதகுலம் அனைத்திற்கும் பொதுவாக வழங்கி ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட வாழ்வை இறை அனுபவம் பளிச்சென்று உணரும்படி செய்வதாகும். இந்த அரும்பணியையும் குருஜி தமது வாழ்நாளில் மிகசிறந்த அறப்பணியாக செய்ய துவங்கி உள்ளார்.
🔴 இறை உணர்வை அனுபவிக்காத ஆத்மா மீண்டும் மீண்டும் பிறந்து சம்சார சாஹரத்தில் உழன்று கொண்டே இருப்பதிலிருந்து முழுமையாக விடுபட்டு இறைவன் நாராயணனின் திருவடிகளில் நிரந்தரமாக இளைப்பாரவும் அவனது திவ்விய திருமேனியை தரிசிக்கவும் தகுதி பெறவும் ஸ்ரீ நாராயண தீட்சை என்ற அரியதொரு மந்திர தீட்சையை மனிதர்களுக்கு வழங்கி அவர்களது இக பர வாழ்வை மேம்படுத்த தொண்டாற்றி வருகிறார்.
🔴 குருஜி தான் கற்றிருந்த யோகசாதனா முறைகளாலும் கடினமான தவத்தாலும் ஏராளமான சித்துகளை அடைந்திருந்தார். பண்டையகால ரிஷிகள் செய்கின்ற அஷ்டமா சித்துக்கள் அனைத்துமே குருஜிக்கு அத்துப்படியாக தெரியும். ஆனால் அந்த சக்திகளால் உலக மக்களை வசீகரம் செய்ய முடியுமே தவிர இறைவனிடம் சென்று சேர இயலாது என்பதை நன்கு உணர்ந்த குருஜி தனது சித்துக்கள் எதையுமே பயன்படுத்துவதை கைவிட்டு விட்டார். இறைவணனான நாராயணன் கொடுக்கும் கர்ம பலனை முழுமையாக அனுபவிப்பதே தனது வாழ்க்கையின் முக்கிய நோக்கம் விதியின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு எந்த வித முயற்சியோ பிரார்த்தனையோ செய்வது இல்லை என்ற முடிவையும் மேற்கொண்டு விட்டார். ஆனால் சித்துக்கள் மீது ஆர்வம் கொண்ட சீடர்கள் சிலருக்கு சித்துக்களை பெறுவதற்கான வழிமுறைகளை கற்பித்தார். .

☀️ குருஜியின் மூன்று லட்சியம் ☀️
🔴 மனிதனாக பிறவி எடுத்த அனைவரும் மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொண்டு உலக முழுவதையும் அன்பு மயமானதாக அமைதி பூங்காவாக மாற்ற வேண்டும்.
🔴 தான் யோகநிலையில் தரிசனம் செய்த ஸ்ரீமன் நாராயணனின் பிரமாண்டமான திருக்கோவிலை உருவாக்க வேண்டும்.
🔴 ஆன்மிகம் உலகை ஆளவேண்டும்.